தமிழின் சிறப்பையும், புகழையும் பரப்ப தொன்றுதொட்டு தமிழ் அறிஞர்கள், இலக்கியவாதிகள் இருந்தது வந்துள்ளனர். அவ்வாறு சமகாலத்தில் வாழ்ந்து மறைந்தவர் நெல்லை கண்ணன். இவரது தமிழ் புலமையையும், தமிழ் இலக்கண, இலக்கிய ஞானத்திற்கும் இவரை தமிழ்கடல் என எல்லோராலும் அழைப்பட்டவர். இவர் பலநூறு பட்டிமன்றங்களுக்கும், இலக்கிய பேச்சரங்களுக்கும் நடுவராகவும், இவரது நகைச்சுவை பேச்சால் மக்களை கவரவும் செய்தவர்.
திருநெல்வேலியில்1945ம் நெல்லை கண்ணன் பிறந்தார். தமிழ் இலக்கண, இலக்கிய உலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் பயணித்தார். காமராஜரால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அவரோடு பயணித்தவர். காமராஜரின் பெருமைகளை, அவரது ஆட்சியின் சிறப்பை, காமராஜரோடு நெல்லை கண்ணன் அவர்கள் பயணித்த அனுபவங்களென இன்றையத் தலைமுறைக்கு பெரிதும் கொண்டு சேர்த்தவர் நெல்லை கண்ணன் அவர்கள்.
தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ஓர் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் இன்றைய இளைஞர்களை பெரிதும் கவர்ந்தார். ஆங்கிலம் கலந்த தமிழே இன்றைய சமுதாயம் பேசிவரும் சூழ்நிலையில் அந்நிகழ்ச்சி முற்றிலும் வித்தியாசமாக முழுவதுமாக தமிழிலேயே கொடுக்கப்படும் தலைப்பைப் பற்றி பேச வேண்டும். அவ்வாறு பேசி நடுவர்களை நன்மதிப்பைப் பெறும் போட்டியாளர்களை நெல்லை கண்ணன் அவர்கள் பாராட்டும் விதமே உணர்ச்சிப்பூர்வமாக, நெகிழ்ச்சியாக இருக்கும்.
இவ்வாறு தமிழ்கூறும் நல்லுலகில் பெரிதும் மதிக்கப்பட்ட நெல்லை கண்ணன் கடந்த 18ம் தேதி வயது மூப்பு காரணமாக காலமானார். இவரது இழப்பு தமிழ் இலக்கிய உலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும். யாரும் எதிர்பார்த்திடாத இவரது மறைவு அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.