திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க குவைத் பிரிவின் 25 ஆம் ஆண்டு வெள்ளிவிழாவில் பங்கேற்பதற்காக அப்பாவு அந்நாட்டுக்கு சென்றிருந்தார்.
நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய அப்பாவு, “சட்டசபை நிகழ்ச்சிகளை தொலைக் காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்து மக்கள் நேரடியாக சட்டசபை நிகழ்ச்சிகளை பார்க்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மட்டுமில்லாமல் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதியில் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள கோரிக்கைகளை அளிக்க வேண்டும் என்றும் அதை நிறைவேற்றித் தருவதாகவும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
ஐடி புரட்சியால் தமிழக இளைஞர்காள் வெளிநாடுகளில் பார்க்கும் அளவிற்கு உயர்ந்துள்ளனர்” எனக் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் குவைத் அனைத்து தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் மற்றும் குவைத் வாழ் தமிழர்களும் கலந்து கொண்டனர்.
