தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனா கந்தசாமி சர்வதேச ஹெர்மான் கெஸ்டன் விருதைப் பெறுகிறார்

உலகம் ஐரோப்பா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள்

சென்னையைச் சேர்ந்த நாவல் எழுத்தாளர், கவிஞர், சாதி எதிர்ப்பு செயற்பாட்டாளர் மீனா கந்தசாமி இந்த வருடத்திற்கான சர்வதேச விருதிற்கு தேர்வாகியுள்ளார். ஜெர்மன் நாட்டின் “பென்” (Pen) என்ற அமைப்பு ஜெர்மன் அதிபர் ஹெர்மான் கெஸ்டனின் பெயரில் அவரது 85வது பிறந்தநாள் முதல் இந்த விருதை சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் மீனா கந்தசாமி ஹெர்மான் கெஸ்டன் விருதினை பெறுகிறார்.
மீனா கந்தசாமி சமூகத்தில் நிகழும் சாதியப் பாகுபாடு, பாலின பாகுபாடு மற்றும் சமூக அடக்குமுறைகளை தன் எழுத்துக்களில் வெளிபடுத்தும் ஓர் எழுத்தாளர் ஆவார். இவரது எழுத்துக்கள் மற்றும் கவிதைகள் ஏற்கனவே பல்வேறு சர்வதேச விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றன மற்றும் ஃபிக்ஷன் பிரிவில் பெண்களுக்கான விருதினை இவர் பெற்றிருக்கிறார்.
இந்த விருது கிடைப்பெற்றதிற்கு மகிழ்ச்சி தெரிவித்த மீனா கந்தசமி, பேச்சுரிமை பற்றி பேசும் ஓர் தளத்திலிருந்து ஓர் விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி மற்றும் இத்தருணம் உண்மையிலேயே பயம் கொள்ளாமல் பேச ஓர் தைரியம் அளிப்பதாக தெரிவித்திருக்கிறார்.
கன்டர் கிராஸ் மற்றும் ஹரால்டு பின்டர் போன்ற தலை சிறந்த எழுத்தாளர் வரிசையில் இப்போது மீனா கந்தசாமி இந்த விருதினைப் பெறும் முதல் தமிழராவார்.
மீனா கந்தசாமியின் பெரும்பான்மையான கவிதைப் புத்தகங்கள் ஜெர்மன் மொழியில் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *