முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவிருந்த விமானத்தில் இன்ஜின் கோளாறு காரணமாக பயணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணிக்கு டில்லி செல்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 8.30 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், டெல்லி செல்ல இருந்தார். இந்தநிலையில் சரியாக 8: 20 மணிக்கு ஆறாம் நம்பர் கேட்டிற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல தயாராக இருந்தார்.
அப்போது, ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜினில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 317 பயணிகளுடன் டெல்லி செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.