தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டம் – ஒரு கோடியே ஒன்றாவது பெட்டகம் என்ற மைல்கல்லை எட்டயது

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மருத்துவம்

தமிழக அரசு அமல்படுத்தி உள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் திருச்சி அருகே உள்ள கிராமத்தில், ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தொடங்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி இலட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். அரசு சார்பில் செவிலியர்கள் வீடு தோறும் சென்று, உடல்நலம் பாதிப்பு மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களை சந்தித்து, அவர்களின் உடல்நிலை குறித்து சோதனை, மருந்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. திமுகஅரசின் இந்த திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக கிராமப்புற மக்களின் மருத்துவ செலவு கணிசமாக குறைந்துள்ளது.
இந்த நிலையில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளியான, திருச்சி, சன்னாசிபட்டியில் பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து அவரிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்ததார்.
இந்த நிகழ்ச்சியின்போது, முதலமைச்சருடன், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உள்பட மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *