ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடைச் சட்டம் அமலுக்கு வந்தது – அரசாணை வெளியிடு, 3 ஆண்டுகள் வரை சிறை

அரசியல் செய்திகள் தமிழ்நாடு விளையாட்டு

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாத கால சிறை அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும் என்று சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது ஓராண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சூதாட்டத்தை நடத்தும் நிறுவனம் அல்லது நபர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும் என்றும், இரண்டாம் முறை தவறிழைக்கும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு முந்தைய தண்டனையை விட இரட்டிப்பாக தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

செல்போன் எண்ணின் இருப்பிடத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. சூதாட்டம் அல்லாத இதர ஆன்லைன் விளையாட்டுகளுக்கு, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும் முடிவு செய்துள்ளது. ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் தலைமையில் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை ஆணையம் செயல்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஒரு ஊடகங்களிலும், செயலிகளிலும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் வெளியிட தடை விதிக்கப்படுகிறது. ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்ய வங்கிகள் ஒத்துழைக்கவும் தடை விதிக்கப்படுகிறது. ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டம் 2022 அரசிதழில் வெளியானதையடுத்து நடைமுறைக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *