புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளிமாநிலத் தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பதிவு செய்வதற்காக தனியே ஒரு வலைதளம் (https:/labour.tn.gov.in/ism) உருவாக்கப்பயுள்ளது. இவ்வலைதளத்தில் இதுவரை சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்கள் தொழிலாளர் துறை அலுவலர்கள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத் துறை அலுவலர்கள், வேலையளிப்போர் மூலமாகவும் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களால் சுயமாகவும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அண்மையில் தமிழ்நாட்டில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் காட்சி பதிவுகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இது போலியான காட்சியென காவல்துறையும் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவிக்கையில், தமிழ்நாட்டிற்கு வருகை தரும் அனைத்து மாநில தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசு செய்து தருவதோடு, தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்களுக்கு உரிய சலுகைகளையும், பாதுகாப்பினையும் உறுதி செய்து வருகிறது.