சென்னை மெரினா கடற்கரையில் பாய்மர படகு விளையாட்டு அகாடமி அமைக்க தமிழக அரசு வேலைகளைத் தொடங்கியுள்ளது.
இந்த அகாடமி மற்றும் திறன்மிகு பயிற்சி மையம் ரூ.7 கோடி செலவில், கூவம் முகத்துவார பகுதியில் ஏற்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் சென்னை மெரினா கடற்கரையில் பாய்மரப் படகு விளையாட்டு அகாடமி அமைப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
2.75 ஏக்கர் பரப்பளவில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் பாய்மர படகு அகாடமி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு மெரினா கடற்கரையில் படகு இல்லம் இருந்த இடத்தில் பாய்மரப் படகு அகாடமி அமைய உள்ளது.
2 தளங்கள் கொண்ட கட்டிடமாக பாய்மர படகு அகாடமி கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற விண்ணப்பித்துள்ளது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்.