களைகட்டிய பொங்கல் பண்டிகை – தமிழர் திருநாளை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

இந்தியா கலை / கலாச்சாரம் செய்திகள் தமிழர் விளையாட்டு தமிழ்நாடு நிகழ்வுகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மண்மணம் வரும் நிகழ்ச்சிகள் விவசாயம்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். இதையொட்டி கடைகளில் கரும்பு, மஞ்சள் மற்றும் புத்தாடைகள் வாங்க மக்கள் குவிந்துள்ளனர். பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து மட்டும் சுமார் 8 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர். இதனால் பொங்கல் விழா களை கட்டியுள்ளது.
தமிழக மக்களால் பாரம்பரியமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை விழா, போகியுடன் தொடங்கி காணும் பொங்கல் வரை 4 நாட்கள் உற்சாகமாக கொண்டாடப்படும்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி 3 நாட்களில் தினசரி இயக்கப்படும் 6,300 பஸ்களுடன், சென்னையில்  இருந்து 4,449 சிறப்பு பஸ்கள் மற்றும் பல்வேறு முக்கிய இடங்களில்  இருந்து என 6183 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 16,932 பஸ்கள்  இயக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து மட்டும்  ரயில் மற்றும் பஸ்கள் மூலமாக சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானோர்  சொந்த ஊர்களுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகளும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற தொடங்கியுள்ளது. உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மக்கள் அனைத்து சுற்றுலாத்தலங்களுக்கு படையெடுப்பார்கள் என்பதால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்  துறையினர் செய்துள்ளனர். சென்னையில், கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.