திருவண்ணாமலையில் அடுத்தடுத்து ஏடிஎம் கொள்ளை – குற்றவாளிகளை பிடிக்க ஆந்திரா விரைந்த தமிழக போலீஸ்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நள்ளிரவில் அடுத்தடுத்து நான்கு ஏடிஎம் மையங்களில் 72 லட்சம் ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்தவர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் பாரத ஸ்டேட் வங்கியின் மூன்று ஏடிஎம் மையம் மற்றும் ஒன்இந்தியா ஏடிஎம் மையத்தில் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்தது. ஏடிஎம் மையத்தின் ஷட்டரை மூடிவிட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள், கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்தனர்.
இதில், திருவண்ணாமலை நகரின் மைய பகுதியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் 19,50,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இதேபோன்று, திருவண்ணாமலை நகர எல்லைக்கு உட்பட்ட 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேனிமலை எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் இருந்து 32,00,000 லட்சம் கொள்ளை போனது.
சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரித்த காவல்துறை வண்டியை அடையாளம் கண்டு அதனை பிடிக்கை தனிப்படை ஒன்று ஆந்திர மாநிலம் விரைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.