பழந்தமிழ் இலக்கியத்திற்குப் புதுப்பொலிவு தந்து, தமிழ் மொழியின் பெருமையை உலகம்அறியச் செய்தவர் ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர். 1855ஆம் ஆண்டு நாகை மாவட்டத்தில் பிறந்தார். உவே.சாமிநாத அய்யரின் 168வது பிறந்த நாள் இன்று.
தமிழக ஆளுநர் ரவி கூறுகையில், பழங்கால தமிழ் எழுத்துகளுக்கு புத்துயிர் அளித்தவர். தமிழ் இலக்கியத்திற்கு அவரது அளித்த பங்களிப்பு விலைமதிப்பற்றது எனக் கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தமிழ்த் தாத்தா உ.வே.சா.வை நினைவைப் போற்றி திக்கெட்டும் தமிழ் பரவ பணி செய்வோம். தமிழ் காக்கும் பணிக்கு நம்மை ஒப்படைத்துக்கொள்வோம் எனக் கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் அறிக்கை: அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்த தமிழ் தாத்தா உ.வே.சா அவர்கள் . இருபதாம் நூற்றாண்டில், தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகெங்கும் அறியச் செய்தவரின் பெருமையை போற்றி வணங்குவோம் என்றார்.