தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் அதிகளவில் பயணிப்போருக்கு 50% கட்டணச் சலுகை – போக்குவரத்து துறை அறிவிப்பு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் முதன்மை செய்தி

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தனது பயணிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த பல்வேறு சலுகைகளையும் திட்டங்களையும் கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது டிக்கெட் முன்பதிவு செய்து ஒரு மாதத்தில் ஐந்து முறைக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு 50 சதவீதச் சலுகை வழங்கப்படும் என்று தமிழகப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் கொடுத்துவந்த நிலையில், சமீபத்தில் உள்ளூர் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் நகர பேருந்துகளில் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளில் படுக்கை வசதி உள்ள , ஏசி பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும் பயணிகள் எண்ணிக்கை என்பது உயரவில்லை. அதனால் புதிய திட்டங்களை போக்குவரத்துக்கு துறை அறிமுகம் செய்துள்ளது.
அரசு விரைவு போக்குவரத்து கழகம் அல்லது SETC என்று சொல்லப்படும் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளை ஊக்குவிப்பதற்காக கட்டண சலுகைத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் படி, முன்பதிவு செய்து ஒரு மாதத்தில் ஐந்து முறைக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு அவர்களுடைய 6 ஆவது பயணத்தில் இருந்து டிக்கெட் கட்டணத்தில் 50% தள்ளுபடி பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *