பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின; வழக்கம்போல் மாணவிகள் தேர்ச்சி விகிதமே அதிகம்

இந்தியா உயர்கல்வி உலக தமிழ் பள்ளிகள் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ் பள்ளி நிகழ்வுகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. 91.39 சதவிகித மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் ஒருவர் கூட 100க்கு 100 மதிப்பெண்கள் பெறவில்லை. ஆங்கிலப்பாடத்தில் 89 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 3649 பேர் 100க்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடந்தது. பத்தாம் வகுப்பு தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்களும் , 11ம் வகுப்பு தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்களும் எழுதினர். இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கி மே 4ம் தேதி நிறைவடைந்தது.
இந்நிலையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக மாணவர்கள் தெரிந்து கொண்டனர். பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,35,614 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் 4,04,904 பேர் மாணவர்கள், 4,30,710 பேர் மாணவிகள் ஆவர். வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்திலும் ராணிப்பேட்டை மாவட்ட மாணவர்கள் கடைசி இடத்தையும் பிடித்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் ஒருவர் கூட 100க்கு 100 மதிப்பெண்கள் பெறவில்லை. ஆங்கிலப்பாடத்தில் 89 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 3649 பேர் 100க்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அறிவியலில் 3584 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 320 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *