தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான விற்பனை 25% வரை சரிவு – அமைச்சர் முத்துசாமி அதிகாரிகளுடன் ஆலோனை

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் தினசரி விற்பனை சுமார் 25 விழுக்காடு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் 5,329 அரசு மதுபானக் கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் 22ம் தேதி 500 கடைகள் மூடப்பட்டன. நாள்தோறும் டாஸ்மாக் மதுபானம் சுமார் 150 கோடி ரூபாய் வரைக்கு விற்பனை நடைபெற்று வந்த நிலையில், தற்போது விற்பனை 25 விழுக்காடு சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, நாள்தோறும் விற்பனையில் சுமார் 35 கோடி ரூபாய் குறைந்துள்ளது. தமிழகம் முழுவதும் டெண்டர் விடாமல் செயல்பட்டு வந்த 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டதுடன், 500 மதுபான சில்லறை விற்பனை கடைகளும் மூடப்பட்டதால் வருமானம் குறைந்துள்ளதாக தெரிகிறது. சில்லறை விற்பனை குறைந்துள்ளதால், விரைவில் டாஸ்மாக் கடைகளில் பார் அமைப்பதற்கான டெண்டர் விட திட்டமிடப்பட்டுள்ளது.
மதுபான விற்பனையை அதிகரிப்பது மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்தும் கர்நாடகாவை போல தமிழ்நாட்டிலும் டெட்ரா பாக்கெட் மதுவிற்பனை அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், அது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *