திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், இதில் வடமாநிலங்களில் கடைபிடிக்கும் ஓ.டி.டி வெளியிடு முறையை தமிழ் தயாரிப்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது புதிய படங்களை 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை வைப்பது குறித்த விவாதம் நடக்கவுள்ளது. மேலும், தங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால், கேரள திரையரங்க உரிமையாளர்கள் 22ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தம் செய்வதுபோல் நாமும் செய்யலாமா என்று திரையரங்க உரிமையாளர்கள் ஆலோசிக்க உள்ளனர்.
தற்போதைய தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா சிறியப்படங்களுக்கு டிக்கெட் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை திரையரங்கு உரிமையாளர் சங்கத்திடம் முன் வைத்துள்ளார். அவரின் கோரிக்கை தொடர்பாகவும் நாளைய பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்யவுள்ளனர்.