தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் முறையை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டுவருகிறது. இச்சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக பெறப்படும் புகார்களை தடுக்கும் வகையில் நான்கு கடைகளில் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மட்டுமே, கடைகளுக்கு உள்ளேயே தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் நிறுவ நடவடிக்கைகளில் உள்ளது.
இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும்போது அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விற்பனைக்கு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படுகிறது.
தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம், வணிக வளாக சில்லறை விற்பனை கடைகளுக்கு உள்ளேயே நிறுவப்பட்டுள்ளது. மேலும், தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் செய்யப்படும் அனைத்து விற்பனைகளும் கடைப்ணியாளர்கள் மேற்பார்வையில் மற்றும் விற்பனையாளர்களின் முன்னிலையிலேயே நடைபெறும்.