மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்றால் பணி நீக்கம்; டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி

அரசியல் ஆரோக்கியம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் டிஸ்மிஸ் செய்யப்படுவீர்கள் என்று ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உச்சபட்ச எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் எச்சரிக்கைகளையும் மீறி, பல்வேறு கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துவருகின்றன.
இந்தநிலையில் டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சில்லறை விற்பனை கடை பணியாளர்கள் மதுபானம் மற்றும் பீர் வகைகளை அரசு நிர்ணயித்த விலையின்படியே விற்பனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும், அவ்வாறு விற்பனை செய்தால் பணியாளர்கள் நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடையின் வேலை நேரத்தில் பணியில் இல்லாத பணியாளர்கள் குறித்து மேற்பார்வையாளருக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கப்படும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.