சுத்தமாக தயாரிக்கப்பட்ட சுவையான உயர்தர உணவை குறைந்த விலையில் வழங்குவதை நோக்கமாக கொண்டு கடந்த ஒரு வருடமாக நியூயார்க் மாநகரில் அமைந்துள்ள டேஸ்ட் ஆப் சென்னை உணவகம் செயல்பட்டு வருகிறது. எளிமையான உணவில் அழகை ரசிக்கும் உணவுப் பிரியர்களுக்கு இவ்வுணவகம் ஒரு மாபெரும் வரப்பிரசாதம்.
உயர்தர உணவகத்திற்க்கான ஆடம்பரங்களோ வாடிக்கையாளர்களைக் கவர கண்கட்டி வித்தைகளோ இல்லாமல் பிடித்த உணவினை ரசித்துச் சாப்பிட ஏதுவான சூழ்நிலையோடு செயல்படும் டேஸ்ட் அபி சென்னையில் நல்ல விலையில் நல்ல உணவு எப்பொழுதும் கிடைக்கும்!!
வீட்டுச் சுவையும்நமக்குத் தருகிறது. ஆரோக்கியமான உணவை விரும்புபவர்களுக்கான உணவகம் இது.மற்ற உணவகங்களுடன் ஒப்பிடும்போது விலைகள் மிகவும் குறைவாகவும் நியாயமானதாகவும் இருக்கும்.
வார இறுதி நாட்களில் தங்களது சிறப்பு உணவு பட்டியலால் மனம் ஈர்க்கிறார்கள். நம் வீட்டு விஷேசங்களிலும் பரிமாறும் சேவை உள்ளது. சிறந்த தருண்களை மேலும் சிறப்பாக்க பண்டிகை காலங்களில் நம் வருகையை முன்பதிவு செய்து டேஸ்ட் ஆஃப் சென்னையின் உணவோடு மகிழலாம்.
உரிமையாளர்களின் முழு பெயர்: முருகன் ஆர் கவுண்டர்
சமையல்: ராஜு நாமக்கல்
அனுபவம்: சேலம் மாநகரில் உணவகத் துறையில் பத்து வருடங்கள்
இடம்: 39W, John ST, Hicksville NY-11801