இந்தியாவைச் சேர்ந்த டாடா நிறுவனம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் என்ற ஐ-போன் உற்பத்தி ஆலையை ஏலம் எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகத்தில் செயல்பட்டு வரும் விஸ்ட்ரான் நிறுவனத்தை டாடா நிறுவனம் ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளது. ஐ-போன் உற்பத்தியை இந்தியாவிலேயே செய்யும் முதல் நிறுவனமாக விஸ்ட்ரான் உள்ளது. விஸ்ட்ரான் நிறுவனத்தின் மதிப்பு சுமார் ரூ.4,920 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
விஸ்ட்ரான் நிறுவனம் தாய்லாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த ஆலையை டாடா நிறுவனம் வாங்கினால், ஐ-போனை இந்தியாவில் உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனம் என்ற பெருமையை டாடா பெறும்.