ரோஜர் ஃபெடரர் டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னராக விளங்கியவர். ஆண்கள் ஒற்றயர் பிரிவு ஆட்டத்தில் யாரும் தன்னை எளிதில் அசைக்கமுடியாத, வீழ்த்தமுடியாத வீரராக திகழ்ந்தவர்.1981ம் ஆண்டு ஸ்விட்சர்லாந்து நாட்டில் பிறந்தார். 1998ம் ஆண்டு முதல் டென்னிஸ் ஆடத் தொடங்கிய ரோஜர் பின்னாளில் உலகின் நம்பர் ஒன் வீரராக வலம் வந்தார்.
டென்னிஸ் ஆட்டத்தில் கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் மிக முக்கியமானவை. அவைகளை வென்றால் மிகவும் கவுரவம் நிறைந்ததாக கருதப்படும். இவர் அந்த கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை 20 முறை வென்றுள்ளார். முறையே அமெரிக்க ஒபன் டென்னிஸ் பட்டத்தை 5 முறையும், விம்பிள்டன் பட்டத்தை 8 முறையும், பிரன்ஞ்ச் ஓபன் பட்டத்தை ஒரு முறையும், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 6 முறையும் வென்று சாதனைப் படைத்துள்ளார். இதுபோன்று 103 ஏடிபி பட்டங்களை வென்றிருக்கிறார். டென்னிஸ் தரவரிசையில் தொடர்ந்து 237 வாரங்கள் முதல் இடத்தில் இருந்திருக்கிறார்.
இப்படி டென்னிஸ் உலகை ஆண்ட ரோஜர் கடந்த வாரம் ஓய்வுப் பெறுவதாக அறிவித்தார். இது டென்னிஸ் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி தந்தது. லண்டன் நகரில் நடைபெற்ற லேவர் கோப்பை தான் ரோஜர் ஆடிய கடைசி ஆட்டம். இதில் மற்றொரு முன்னணி வீரரான ரஃபேல் நடால் இருவரும் இரட்டையர் ஆட்டத்தை ஆடினர். ஆட்டம் முடிந்ததும் கண்ணிர் மல்க வவிடைபெற்றார். ரஃபேல் நடால் ரோஜரோரின் டென்னிஸ் ஓய்வை ஏற்க முடியாமல் அழுதது அனைவரையும் நெகிழச் செய்தது.