கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராணுவம் திருப்பிச் சுட்டதில் 21 அல்-ஷபாப் பயங்கரவாதிகள் உயிரிழந்தனா்.
அந்த அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதிகள், சோமாலியா தலைநகா் மொகடிஷுவிலுள்ள ராணுவ முகாம் ஒன்றின் மீது செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தினா். அதையடுத்து, ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது.
ராணுவத்தின் நடவடிக்கையால் 21 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். மேலும், இந்தத் தாக்குதலில் ராணுவத்தின் தரப்பில் 5 வீரா்களும் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது தவிர, 12 வீரர்கள் தாக்குதலில் காயமடைந்ததாக அவா்கள் கூறினா்.