தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை; மேற்கு வங்க, தமிழக அரசுகளிடம் விளக்கும் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

அரசியல் இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் முதன்மை செய்தி

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்க அரசு தடை விதித்தது. இதே போன்று தமிழ்நாட்டிலும் பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தம் எழுந்ததால் தி கேரளா ஸ்டோரி படம் திரையிடப்படாது என்று திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்தனர்.
தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடும் தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு பாதுகாப்பு தராமல் தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
மதமாற்றம் மற்றும் பயங்கரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்க அரசு தடை விதித்தது. இதே போன்று தமிழ்நாட்டிலும் பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தம் எழுந்ததால் தி கேரளா ஸ்டோரி படம் திரையிடப்படாது என்று திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்தனர்.
இதனை எதிர்த்து படத்தயாரிப்பு குழு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு , தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் பி.எஸ்.நரசிம்மா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் படம் வெளியாகும் போது, மேற்கு வங்கத்தில் மட்டும் படம் தடை செய்யப்பட்டது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மேற்கு வங்க அரசுத்தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று உளவுத்துறை மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததாக கூறினார்.
அனைத்துத்தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தமிழ்நாட்டிலும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மறைமுகமாக தடை செய்யப்பட்டதா என்று கேள்வி எழுப்பினர். மேலும், திரையரங்கிற்கு அச்சுறுத்தல் வருவதாக கூறப்படும் நிலையில், அதற்கு பாதுகாப்பு வழங்காமல், தமிழ்நாடு அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்றும் வினவினர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், மே 17ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *