மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார்; பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் கோயில்கள் சித்தர்கள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மண்மணம் மற்றவை முதன்மை செய்தி

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வையொட்டி பக்தர்கள் அனைவரும் வைகை ஆற்றங்கரையோரம் நேர்த்திக்கடனாக மொட்டை அடித்துக்கொண்டனர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா, ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், சித்திரைத் திருவிழாவின் முக்கியமான நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்ற நிலையில், இரவு முதலே கள்ளழகரைக் காண்பதற்காக மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள மக்கள் வெளி மாவட்ட மக்கள் என இலட்சக்கணக்கான மக்கள் வைகை ஆற்றுப்பகுதியில் சூழ்ந்து காலையில் கள்ளழகரை தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் கள்ளழகரைக் காண வந்த பக்தர்கள் அதாவது வெளி மாவட்டம் வெளியூர் பகுதியில் இருந்து வந்தவர்கள், தரிசனம் செய்து பின்பு, ஆழ்வார் புரம் பகுதியிலிருந்து செல்லூர் பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரம் தங்கள் குழந்தைகள், பெரியவர்கள் பலரும், கள்ளழகருக்கு நேர்த்திக்கடனாக மொட்டை அடித்து ஆற்றங்கரையில் குளித்து தனது நேர்த்திக் கடனை செய்து கொண்டனர். இது போக பெண்கள் கள்ளழகருக்காக பூ முடி எடுத்துக்கொண்டனர்.
இதில் கள்ளழகர் நண்பகல் 3 மணி அளவில் தல்லாகுளம் பெருமாள் கோவிலிலிருந்து புறப்பாடாகி பல்வேறு மண்டகப்படிகளை சுற்றி வந்து பின்பு பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளி மக்கள் அனைவருக்கும் காட்சியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *