ஆங்கிலம் பேசாமலே உயர் மதிப்பு மிகு மாநாடுகளில் பங்கேற்று தமிழில் மட்டுமே பேசி தங்கள் தொழில் – வணிகத்தில் வெற்றி பெற முடியும் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறது The Rise – எழுமின் அமைப்பு.
எழுமின் அமைப்பினை பிறப்பித்தது CTACIS – Confederation of Tamil Agriculture Commerce Industry and Services / தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் ஆகும்.
இன்றளவில் தமிழருக்காக மட்டும் என ஓரளவுக்கேனும் விரிந்து இயங்குகிற பரிந்துரை வணிக அமைப்பு / Referal Business Organisation ஆக எழுமின் திகழ்கிறது.
13 கிளைகளை உடைய இந்த அமைப்பின் கிளை பெயர்கள் அனைத்தும் தமிழ்ப் பெயர்கள் ஆகும்.அவை அலைகள், திரவியம், செங்காந்தள், வாகை, குறிஞ்சி, விழுதுகள், செல்வம், நெற்கதிர், துளிர், அனிச்சம், சிகரம், குறளோவியம் மற்றும் முத்தமிழ் ஆகும்.
இந்த அமைப்பின் வாராந்திர கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவிட் பெருந்தொற்றுக் காலங்களிலும் இணையம் வாயிலாக இக்கூட்டங்கள் தொடர்ந்தன. இக்கூட்டங்களில் வணிக வாய்ப்புகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இன்று சனிக்கிழமை “அலைகள்” கிளை 300-வது வாரக்கூட்டத்தை சிறப்பிக்கிறது. கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் இவர்கள் இணைய வழியில் சந்தித்தார்கள்.
உலகத் தமிழரின் கூட்டுத் தன்னம்பிக்கையாகவும் தமிழர் தலைநிமிர் காலத்தில் சங்கநாதமாகவும் விளங்கும் இந்த அமைப்பு தங்களது 11-ம் உலக மாநாட்டை ஜூலை 28, 29, 30 நாட்களில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வெகு விமரிசையாக நடத்த விருக்கிறது.
இந்த மாநாட்டில் பங்குபெற உலகத் தமிழர்களையும் வர்த்தகர்களையும் வரவேற்று தொடர்ந்து தமிழ்ப்பணி ஆற்றி வரும் திரு. ம. ஜெகத் கஸ்பர், நிறுவனர், CTACIS அமைப்பு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த மாநாட்டில் பங்குபெற விரும்புவோர்
இந்தியாவிலிருந்து பதிவு செய்ய: www.tamilrise.org
பிற நாடுகளிலிருந்து பதிவு செய்ய: www.therise.asia
என்ற வலைதளங்களின் மூலம் அணுகலாம். அல்லது 91500 60032 என்ற எண்ணிலும் தொடர்பு செய்யலாம்.