உலகப் புகழ்பெற்ற ஒடசா பூரி ரத யாத்திரை வரும் 20ஆம் தேதி நடைபெறுகிறது.
ஒடிசாவின் கடற்கரை நகரான பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை புகழ்பெற்றதாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள நடக்கும் இந்த ரத யாத்திரையில், கொரோனா காரணமாக கடந்த ஆண்டுகளில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்தாண்டு வழக்கம்போல் பக்தர்கள் பங்கேற்புடன் வருகிற வரும் 20ஆம் தேதி பூரி ரத யாத்திரை நடைபெறுகிறது. இதற்கு வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் இருந்து 10 லட்சம் பேர் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெயில், பஸ் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் சுகாதார முகாம்கள் நடத்தப்படும். பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரதங்கள் செய்யும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. மரத்தால் ஆன மூன்று ரதங்கள் பூரி வீதிகளில் வலம்வரும். ஜெகநாதர், பலராமன், சுபத்திரா முறையே மூன்று ரதங்களில் ஏற்றப்பட்டு பூரி வீதிகளில் பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.