தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை வாகன உற்பத்தி ஆலைகள் அதிகம் பெற்ற நகரமாகும். நாட்டில் உற்பத்தியாகும் வாகனங்களில் பெரும்பாலும் சென்னையில் உற்பத்தி செய்யப்படுகின்றது. அப்போது பெங்களூரு மாநகரம் ஐடியின் தலைநகரமாக இருந்தது. அதன்பின் சென்னையின் உள்கட்டமைப்பு, போக்குவரத்து வசதிகளை கருத்தில் கொண்டு ஐடி நிறுவனங்கள் சென்னையைத் தேர்ந்தெடுத்து அங்கே தங்கள் அலுவலகங்களை திறந்து பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கின.
2000ம் ஆண்டுக்கு பின் ஐடி அசூர வளர்ச்சியடைந்து பல நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது அலுவலங்களை திறக்க முனைப்பு காட்டின. இதனால் 2005ம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில் ஐடி பார்க் கட்டப்பட்டது. டைடல் பார்க் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு பல ஐடி நிறுவனங்களுக்கு வாய்ப்பாக அமைந்தது சென்னையில் அஸ்திவாரம் அமைக்க. சென்னைக்கு அடுத்து கோயம்புத்தூர் ஐடி நிறுவனங்களின் சாய்ஸாக இருந்தது. அங்கேயும் பிரபல இந்திய மற்றும் வெளிநாட்டு ஐடி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் அலுவலகங்களை திறந்தது. இதனால் தமிழக அரசு தென் மாவட்டங்களில் ஐடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாக மதுரையிலும் புதிதாக ஐடி பார்க் அமைக்க முடீவெடுத்துள்ளது. இதனால் தென்மாவட்ட இளைஞர்களுக்கு ஐடி வாய்ப்புகளை உருவாக்கமுடியும். தமிழக அரசு இதற்கு விரைவில் பட்ஜெட் உருவாக்கி அரசாணை வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.