திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளை – அதிகாரங்கள், சொத்துமதிப்பு மற்றும் சிறப்பு அந்தஸ்து என்னென்ன. ??

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கோயில்கள் செய்திகள்

திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளை திருப்பதியில் உள்ள 12 கோயில்களை நிற்வகிக்கின்றன. அதில் உலகின் பணக்கார கடவுளும், பக்தர்கள் அதிகம் வந்துசெல்லும் இரண்டாவது மிகப்பெரிய வழிப்பாட்டு தளமான திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலையும் இந்த அறக்கட்டளை கண்காணிக்கிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஓர் தனிப்பட்ட அறக்கட்டளையாகும். இது ஆந்திர அரசிற்கு கீழ் வராது.
1932ம் ஆண்டு இந்த தேவஸ்தானம் போர்டு அன்றைய சென்னை மாநாக அரசால் உருவாக்கப்பட்டது. ஒரு நபர் ஆனையரைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தேவஸ்தான கமீட்டியில் இரண்டு குழுக்கள் இருந்தது. ஒன்று கோயிலில் பூஜை செய்யும் பூசாரிகளும் மற்றும் கோயில் நிர்வாகிகளை கொண்டும் இரண்டாவது குழு விவசாயிகளைக் கொண்டதாவும் உருவாக்கப்பட்டது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் லட்டு மற்றும் கல்வி, மருத்துவம், சாலைவசதி, அணைகள், தண்ணீர் வசதி ஏற்படுத்துதல், தகவல் தொழில்நுட்பத் துறை, வனம் மற்றும் பூங்கா, வருவாய் மற்றும் பொது நிர்வாகம் என அனைத்து துறைகளும் இந்த அறக்கட்டளையின் கீழ் இயங்குகிறது.
2019ம் ஆண்டு கணக்குப்படி திருப்பதி வெங்கடாஜலபதி திருகோயிலின் ஆண்டு வருமானம் 3,100 கோடிக்கும் மேல். தேவஸ்தானத்தின் வங்கிகளில் வைத்திருக்கும் இருப்புத் தொகை 12,000 கோடிகளுக்கு மேல். தங்கத்தின் இருப்பு கிட்டத்தட்ட 10டன் எடையளவு. வங்கிகளில் இருக்கும் தொகைக்காகன வட்டி மட்டும் ஆண்டுக்கு 875கோடிக்கு மேல். ஆண்டுதோறும் 3 முதல் 4 கோடி பக்தர்கள் வருகைத் தருகிறார்கள். நாள் ஒன்றுக்கு 5 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.