ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நடந்த மிககோரமான ரயில் விபத்து; கடந்த 30 ஆண்டுகளில் நடந்த மிகவும் பயங்கரமான விபத்து

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று யஷ்வந்த்பூர் – ஹவுரா எக்ஸ்பிரஸ், ஷாலிமார் – சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 288க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் 900 பேர் காயம் அடைந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒடிசாவில் நடந்துள்ள இந்த விபத்து, சுதந்திரத்திற்கு பின்னர் நடைபெற்ற கோரமான ரயில் விபத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
1995க்கு பிறகு இந்திய அளவில் மிக மோசமான ரயில் விபத்தாக, ஒடிசா பாலாஷோர் ரயில் விபத்து பதிவாகியுள்ளது; தற்போது வரை 288 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்மாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.கடந்த 1995ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி புது டெல்லியிலிருந்து பூரி சென்றுக் கொண்டிருந்த புருஷோத்தம் எக்ஸ்பிரஸ், உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத் அருகே நின்று கொண்டிருந்த காளிந்தி எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இதில் சுமார் 305 பயணிகள் வரை உயிரிழந்தனர்.
இதனிடையே கடந்த 1981ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதியன்று பீகார் மாநிலத்தில் மான்சி மற்றும் சகார்சா இடையே சுமார் 800க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ரயில் ஒன்று பாக்மதி எனும் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் மீட்பு பணிகளில் ஏற்பட்ட தோய்வு காரணமாக சுமார் 750க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். முதல் கட்டமாக 200 உடல்களை மீட்கவே 5 நாட்கள் வரை தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.