உலகம் முழுவதும் உள்ள பல முக்கிய பிரமுகர்களின் டிவிட்டர் கணக்குகள் திருடப்பட்டதாக வெளியாகியுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை, பாலிவுட் நடிகர் சல்மான் கான், நாசா, உலக சுகாதார அமைப்பு ஆகியோரின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அவர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக செய்திகள் பரவுகின்றன. சில தகவல்களை இணையத்தில் வெளியிட்டு 40கோடிக்கும் அதிகமாக டிவிட்டர் கணக்குகள் திருடப்பட்டுவிட்டது என ஒரு ஹேக்கர் செய்தி வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே 53 லட்சம் கணக்குகளின் தகவல்கள் திருடப்போயின என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த செய்தி உறுதியானால் டிவிட்டர் தலைமை பொறுப்பில் இருக்கும் எலோன் மஸ்க் பெறும் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
ஏற்கனவே பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் தகவல்கள் திருட்டு தொடர்பான வழக்கில் 22,000 கோடி ரூபாய் அபராதம் செலுத்தியது என்பது குறிப்படத்தக்கது.