உலகில் பல பகுதிகளில் திடீரென முடங்கிய டிவிட்டர் சேவை – பயனாளர்கள் அவதி

உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வட அமெரிக்கா

உலகில் பல்வேறு இடங்களில் டிவிட்டர் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு இறுதியில் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது ட்விட்டர் சமூக வலைதளம். டிவிட்டரில் கணக்கு வைக்காமல் இருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
அப்படி பிரபலமான டிவிட்டர் நிறுவனத்தை டெஸ்லா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலராக இருந்த எலன் மஸ்க் வாங்கியதில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆட்குறைப்பு நடவடிக்கையால் 7,500 ஊழியர்கள் இருந்த நிலையில் தற்போது 1,800 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். இது ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலகில் பல்வேறு இடங்களில் டிவிட்டர் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் டிவிட்டர் சேவையை மக்கள் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டள்ளது. டிவிட்டர் செயலி மற்றும் இணையதள பக்கத்திலும் அதை பயன்படுத்த முடியவில்லை என சிலர் தெரிவித்துள்ளனர். டிவிட்டர் பயனர்கள் தங்களது போஸ்ட்கள் தெரியவில்லை என்றும் ஹோம் பக்கத்தில் வெகு நேரமாக ‘டிரை அகெயின்’ என்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் டிவிட்டர் பயனர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *