அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இரண்டு சீக்கியர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 3 ஆம் தேதி நிர்மல் சிங் என்ற சீக்கிய முதியவரை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கிவிட்டுச் சென்றிருந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இது அடங்காத நிலையில்
சீக்கிய சமூகத்தினர் மீது, மீண்டும் சிலர் தாக்குதல் நடத்தி உள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரிச்மண்ட் ஹில்ஸ் பகுதியில், நேற்று முன்தினம், சாலையில் சென்றுக் கொண்டிருந்த இரண்டு சீக்கியர்களை, சில நபர்கள் கடுமையாக தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இதில் தொடர்புடைய ஒருவரை கைதும் செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு, இந்திய துணை துாதரகம் கண்டனம் தெரிவித்துஉள்ளது. சீக்கியர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அமெரிக்காவில் பெருகி வருவது கவலையையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்துகிறது.