இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு; செப்டம்பர் மாதம் இறுதிக்குள் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பொருளாதாரம் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து, செப்டம்பர் 30,2023 க்குள் அவற்றை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
செப்டம்பர் 30,2023 க்குள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக்கொள்ள வேண்டும். மே 23, 2023 முதல் ஒரு முறைக்கு அதிகப்படியாக 20,000 ரூபாய் வரையில் ஒருவர் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியும். அனைத்து வங்கிகளும் 2000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் மத்தியில் புழக்கத்தில் விட வேண்டாம் என ஆர்பிஐ அறிவுறுத்தப்பட்டு உள்ளதால், வங்கியில் இருந்து மக்கள் யாரும் 2000 ரூபாய் நோட்டுகளை பெற வேண்டாம்.
மக்கள் இந்தியாவில் இருக்கும் எந்த வங்கியிலும் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யவோ அல்லது வேறு டினாமினேஷன் கொண்ட ரூபாய் நோட்டுகளில் மாற்றிக்கொள்ளலாம்
2000 ரூபாய் மாற்றிக்கொள்ளும் பணியில் வங்கி பணிகள் பாதிக்க கூடாது என்பதறக்காக 20000 ரூபாய் லிமிட் செட் செய்யப்பட்டு உள்ளது
6) இந்த 2000 ரூபாய் லிமிட் என்பது வேறு ரூபாய் நோட்டுகளை மாற்று போது மட்டுமே, வங்கி கணக்கில் டெப்பாசிட் செய்யும் போது எவ்விதமான தடையும், கட்டுப்பாடு இல்லை.
வெள்ளிக்கிழமை RBI வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கியின் Clean Note Policy படி, புழக்கத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு போதுமான நேரத்தை வழங்க முடிவு செய்து அனைத்து வங்கிகளும் செப்டம்பர் 30, 2023 வரை 2000 ரூபாய் நோட்டுகளுக்கு டெபாசிட் அல்லது பணத்திற்கு இணையாக தொகையை மாற்றும் ரூபாய் நோட்டுகளை வழங்கும் வசதியை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.