டைப் சி சார்ஜர்கள் தான் அனைத்து மிண்ணனு சாதனங்களுக்கும் – இந்திய அரசு முடிவு.?

இந்தியா மற்றவை முதன்மை செய்தி

உலகம் பல மாற்றங்களை, பல வளர்ச்சிகளை காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப சந்தித்து வருகிறது. கற்களைக் கொண்டு நெருப்பை வரவைத்ததே மனிதனின் முதல் கண்டுபிடிப்பு. பின்னர் தன் வசதிக்கேற்ப மனிதன் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினான், தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொண்டான். அவ்வாறு உருவாக்கப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் மனிதனின் தேவையை பூர்த்தி செய்வதோடு, அவனது வேலையையும் மிகவும் எளிமையாக்கியது.
எந்தவொரு கண்டுபிடிப்புகளுக்கும் சாதகம், பாதகம் என்று இரண்டும் உண்டு. உலகளில் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பயன்பாடு பன்மடங்கு உயரவே, அதைச் சார்ந்த உதிரி பாகங்கள், ஒயர்கள், சார்ஜர்கள் என அனைத்துப் பொருட்களின் தயாரிப்பும் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்தது. செல்போன், லேப்டாப், வீட்டில் பயன்படுத்தக்கூடிய சிறியளவு ஒலிப்பெருக்கி, இப்படி அனைத்தும் சார்ஜர்கள் மூலம் சார்ஜ் ஏற்றியப் பிறகே பயன்படுத்த இயலும்.
உலகம் ஏற்கனவே ப்ளாஸ்டிக் பயன்பாட்டால் மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறதோ, அதே போல் எலக்ட்ராணிக்ஸ் கழிவுகளாலும் மிகப்பெரிய மாசு ஏற்பட்டிருக்கிறது. பழைய எலக்ட்ரானிக்ஸ் சானதங்களுக்கு சிறய வகைப் பின் கொண்டு சார்ஜ் செய்ய வழிவகை செய்யப்பட்ட நிலையில், தற்போது அறிமுகமாகும் ஒன்ப்ளஸ் போன்றவைகள் சி வகை பின் கொண்ட சார்ஜ்ர்களை வழங்குகின்றது. இப்படி புதிது புதிதாக எலக்ட்ரானிக்ஸ் அறிமுகமாவதால் கழிவுகளும் உலகை பயமுறுத்துகிறது. இது மக்கும் தன்மை கொண்டதல்ல. இப்படியிருக்க, கழிவுகளை குறைக்கும் பொருட்டு, அனைத்து வகை எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கும் பொதுவான சி வகை சார்ஜர்களே பயன்படுத்த, அதற்கான வழிவகை செய்ய நிறுவனங்களுக்கும் அறிவுறுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
உலகளவில் கிட்டத்தட்ட 50 மில்லியன் டன் அளவிற்கு எலக்ட்ரானிக்ஸ் கழிவுகள் சேருவதாக ஆய்வு கூறுகிறது. பயன்பாட்டை நிச்சயம் நிறுத்த முடியாது, ஆனால் குறைந்தபட்சம் இவ்வாறு கழிவுகளைக் குறைத்து உலகின் மாசைக் குறைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.