அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஓராண்டு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என அந்நாடு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் புதிய தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த புதிய திட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு பல்வேறு தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் பணிபுரியும் அரசு ஊழியர்களை தொழில்முனைவோராக மாற்ற இத்திட்டம் உதவும் என கருதப்படுகிறது.
இதன்படி 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேசிய அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு ஓராண்டு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கவுள்ளது. அரசுத் துறைகளில் பணிபுரிபவர்கள், சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்புபவர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கி வருகிறோம்’ என ஐக்கிய அரபு அமீரக அதிபர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கூறினார். இந்த புதிய சட்டத்தின்படி அரசு ஊழியர்களுக்கு விடுமுறையுடன் பாதி சம்பளம் வழங்கப்படும்.