பிரிட்டன் நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் அந்நாட்டு மக்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு பாராட்டு மழையில் நனைத்து வருகிறார்.
பிரிட்டன் நாட்டில் உள்ள கோடிக் கணக்கான குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் நிலையை மேம்படுத்தும் விதமாக, அரசிடம் இருந்து சுமார் 900 பவுண்டு அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 90000 ரூபாய் அளவிலான தொகையை உதவி தொகையாக அளிக்க முடிவு செய்துள்ளது பிரிட்டிஷ் அரசு.
இந்த 900 பவுண்ட் உதவி தொகையை நடப்பு நிதியாண்டில் மூன்று தவணைகளாக பணத்தை நேரடியாக இந்த உதவி தொகை பெற தகுதியானவர்களின் வங்கிக் கணக்குகளுக்குச் செல்லும் என்று பிரிட்டன் நாட்டின் வேலை மற்றும் ஓய்வூதியத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த 900 பவுண்ட் தொகை எப்போது மக்களுக்கு அளிக்கப்படும் என்பது குறித்த கால அட்டவணை விவரங்களை பிரிட்டன் அரசு அறிவிக்கவில்லை. பிரிட்டன் நாட்டின் நிதி நிலை மோசமாக இருக்கும் வேளையில் சரியான நேரத்தில் திட்டமிட்டு இந்த உதவி தொகையை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு 1200 பவுண்ட் மதிப்பிலான நிதி உதவியை அளிக்கப்பட் நிலையில், இந்த ஆண்டு அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் 900 பவுண்டுகளாக குறைக்கப்பட்டு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை தொடர்ந்து அளிப்பது மூலம் மக்கள் பாராட்டி வருகின்றனர்.