உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் குண்டு வெடிப்பு குறித்து சித்தரிக்கப்பட்ட படம் ஒன்றை வெளியிட்டது.
உக்ரைனின் பாதுகாப்புத்துறை அமைச்சம் வெளியிட்ட காளி குறித்த சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவிற்காக, அந்நாட்டு வெளியுறவுத் துறை வருத்தம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் குண்டு வெடிப்பு குறித்து சித்தரிக்கப்பட்ட படம் ஒன்றை வெளியிட்டது. அதில், குண்டு வெடித்து வரும் புகையில், இந்து கடவுளான காளியின் உருவம் இருக்கும் வகையில் சித்தரிக்கப்பட்டிருந்தது. இதற்கு, இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. சமூக வலைதளங்களில் உக்ரைனுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.