நேட்டோ கூட்டணியில் சேருவது குறித்தான கருத்து வேறுபாட்டில் உக்ரைனுக்கு ரஷியாவுக்கும் கடும் போர் மூண்டு நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த வாரம் இங்கிலாந்து பிரதமர் போரில் ஜான்சன் நேரடியாக உக்ரைன் சென்று களநிலவரங்களை கேட்டறிந்ததுடன் ஆயுத உதவிகளும் இதர உதவிகளும் செய்யப் போவதாக அறிவித்திருந்தார்.
ரஷியாவின் மீது அனைத்து நாடுகளும் தடைவிதித்து ரஷியா தனிமைப்படுத்தப்பட்டு திணறி வரும் நிலையில் உக்ரைனுக்கு உலகம் முழுவதிலும் இருந்து உதவிகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் போர் மற்றும் இதர சீரமைப்புக்கான செலவுக்காக உக்ரைனுக்கு ஐந்து கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது போரை முடிய விடாமல் நீட்டிக்க வைக்கும் சூழ்ச்சியின் ஒரு பாகமாக பார்க்கப்பட்டு வருகிறது.