உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், லக்னோவில், கேரளா ஸ்டோரி பட குழுவினருடன் சந்திப்பு.
உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் கேரள ஸ்டோரி படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். உ.பி. மாநிலத்தில் படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
முன்னணி நடிகர் ஆதா ஷர்மா, இயக்குனர் சுதிப்தோ சென், தயாரிப்பாளரும் படைப்பாளருமான விபுல் அம்ருத்லால் ஷா ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். ஒரு நாள் முன்னதாக, உ.பி.மாநிலத்தில் இந்த இந்தி படத்திற்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டது
இந்த சந்திப்பில், அதாவுடன் சேர்ந்து திரைப்பட தயாரிப்பாளர்கள் முதல்வரிடம் படம் பற்றி பேசினார்கள். மே 12 ஆம் தேதி லோக் பவனில் மற்ற அமைச்சரவையுடன் சிறப்புக் காட்சியில் முதல்வர் யோகி படத்தைப் பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விபுல் அளித்த பேட்டியில் “உத்தர பிரதேச அரசும் யோகி ஜியும் இந்த நடவடிக்கையை எடுத்து, எங்கள் மன உறுதியை பலப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் இந்த படத்தை காணும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும். ஏற்கனவே மக்களின் ஆதரவு பெருமளவு கிடைத்துள்ளது என்பதால் முதல்வருக்கும் மக்களுக்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” என்று கூறினார்.
சுதிப்தோ கூறுகையில், “படத்திற்கு வரிவிலக்கு அறிவித்ததற்கும், உத்தரபிரதேச மக்கள் இந்தப் படத்தைப் பார்க்க வாய்ப்பு வழங்கியதற்கும் மாண்புமிகு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க வந்தோம்.” என்றார்