எந்த நாட்டு கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் அமெரிக்க நாட்டில் நுழைய தடை

அரசியல் உலகம் செய்திகள் மற்றவை வட அமெரிக்கா

எந்த நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா இடையே தொடங்கிய வர்த்தக போர், தற்போது அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி கொளுந்து விட்டு எரிகிறது. கொரோனாவை பரப்பியது சீனா தான் என நேரடியாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஹாங்காங், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளை சீனா கட்டுப்படுத்த முயற்சிப்பதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது. சீன நிறுவனங்களின் 5ஜி தொழில்நுட்ப வர்த்தகத்திற்கு முட்டுக்கட்டை போட்டது. அதைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சிகளை சீனா தனது ஹேக்கர்கள் திருடுவதாகவும் குற்றம்சாட்டியது.
அமெரிக்கா மட்டுமின்றி பல நாடுகளின் கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சிகளை சீன ஹேக்கர்கள் திருடியிருப்பதாக அமெரிக்க நீதித்துறை பல தகவல்களை கூறியிருக்கிறது. அதுமட்டுமின்றி அமெரிக்காவின் பாதுகாப்பு ஒப்பந்தங்கள், உயர் தொழில்நுட்பங்கள், கேமிப் சாப்ட்வேர்கள் போன்றவற்றிலும் சீன ஹேக்கர்கள் நுழைந்து தகவல் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, ஹூஸ்டனில் செயல்பட்டு வரும் சீன தூதரகத்தை 3 நாளில் மூட அமெரிக்கா உத்தரவிட்டது.
இந்நிலையில், புதிய கொள்கை அறிவிப்பை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் வெளியிட்டுள்ளது. அதில், எந்த நாட்டை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியினரும் அமெரிக்காவில் குடியேற தடை விதிப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவு நாடு முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவு இருதரப்பு மோதலின் உச்சகட்டமாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *