நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் இந்தியாவுக்காக 5 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் சிறுவயது முதல் நீச்சல் விளையாட்டில் அதிக ஈடுபாட்டுடன் பயிற்சி பெற்றுவருகிறார். தற்போது 17 வயதான அவர் இந்தியாவின் சார்பில் சர்வதேச அளவிலான நீச்சல் விளையாட்டு தொடர்களில் பங்கேற்று வருகிறார்.
கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 5,000 வீரர்கள் பங்கேற்றனர். இதில் மகாராஷ்டிரா அணிக்காக வேதாந்த் பங்கேற்றிருந்தார். அதில் 5 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை அவர் வென்றுள்ளார்.