தமிழ்நாடு ஆன்மீக தேசம் என்று பரவலாக அழைக்கப்பட காரணம், இங்கே எல்லா மதத்திற்குமான புகழ்பெற்ற ஆலயங்கள் உள்ளன. கிறித்துவ மதத்தின் மிகவும் புகழ்பெற்ற ஆலயம் வேளாங்கண்ணியில் அமைந்திருக்கும் புனித ஆரோக்கிய மாதா திருத்தலம் ஆகும். இந்த ஆலயம் கதோலிக்க முறை ஆலயமாகும். புனித அன்னை மேரி மக்களிடையே தோன்றி இயேசுவின் நம்பிக்கை கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதாக வரலாறு. லூர்து மாதா, பாத்திமா மாதா என்று அவர் தோன்றிய இடங்களில் அழைக்கப்படுகிறார்.
தமிழ்நாட்டில் வேளாங்கண்ணி நகரில் தோன்றியதால் வேளாங்கண்ணி மாதா என்றும் உடல் குறைகள் தீர்த்து ஆரோக்கியம் தருவதால் ஆரோக்கியா மாதா என்றும் அழைக்கப்படுகிறார். மேரி மாதா நிகழ்த்திய முன்று அற்புத நிகழ்வால் வேளாங்கண்ணியில் ஆலயம் பெற்றார் என்பது வரலாறு. ஊனமுற்ற சிறுவனுக்கு காட்சியளித்தது, பால் விற்கும் சிறுவனுக்கு காட்சியளித்தது மற்றும் இந்தியா நோக்கி பாய்மர படகில் வந்த போர்ச்சுகீசியர்களுக்கு உதவியது போன்ற அற்பத நிகழ்வுகளை மேரி மாதா நிகழ்த்தினார் என்பது வரலாறு.
மோர் விற்று வந்த ஓர் சிறுவனுக்கு காட்சியளித்து அவனது ஊனத்தை குணப்படுத்தி, எழுந்து நடந்துச் சென்று நாகப்பட்டினத்தின் செல்வந்தரிடம் தனக்கு ஆலயம் எழுப்பாறு கூறினார். பின்னர் ஓர் சிறு ஆலயம் எழுப்பப்பட்டது.
16ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு பாய்மர படகில் வந்த போர்ச்சுகீசியர்கள் நடுக்கடலில் ஏற்பட்ட புயலால் சிக்கியப்பின் மாதா அவர்களுக்கு கரைசேர உதவினார் என்றும், அதன்பின் அங்கிருந்த ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டு பெரிய அளவில் நிர்மாணிக்கப்பட்டது.
வேளாங்கண்ணி மாதா கோயிலில் நடைபெறும் வருடாந்திர திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது. உலகெங்கிலும் இருந்து மக்கள் இத்திருவிழாவை காண திரழ்வார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக மக்கள் அனுமதிக்காமல் எளிமையாக நடைப்பெற்ற இத்திருவிழா இவ்வாண்டு கொடுயேற்றத்துடன் தொடங்கியிருக்கிறது. இந்தாண்டு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.