பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவி-யில் அதிகம் பார்க்கப்படும் சீரியல்களில் ஒன்றாகும். TRP தரவரிசையில் தொடர்ந்து நல்ல ஸ்கோர் செய்யும் இந்த சீரியல் தற்போது 1200 எபிசோட்களை நிறைவு செய்துள்ளது. தமிழ் தொலைக்காட்சியில் தினசரி அதிகம் பார்க்கப்படும் முதல் ஐந்து சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் எப்போதும் இடம் பிடித்து வருகிறது.
இதனை படப்பிடிப்பு தளத்தில் குழுவினர் வெகுவிமர்சையாகக் கொண்டாடினர். இந்த மகிழ்ச்சியை அவர்கள் கேக் வெட்டி பகிர்ந்துக் கொண்டனர். சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் இருந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
சீரியலின் புதிய மைல்கல்லைப் பற்றிப் பேசிய இயக்குநர் சிவசேகர், “பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புதிய மைல்கல்லை எட்டடியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அந்தத் தொடரின் முழுமையான ‘பயணம்’ என் கேரியருக்கு உயிர் கொடுத்தது” என்றார்.