லுலு குழுமம் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் குழுமம் ஆகும். அது சமீபத்தில் தமிழகத்தில் தங்கள் கிளை ஒன்றை திறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் பழனி மாவட்டத்தில் முருகன் கோவில் சாமி தரிசனத்திற்காக வந்திருந்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தமிழகத்தில் லுலு நிறுவனத்திற்கு அனுமதி தர மாட்டோம் என கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, “தமிழகத்தில் லுலு மார்ட் ஒரு செங்கலை வைப்பதற்கு கூட பாஜக அனுமதி கொடுக்காது
நாங்கள் எந்த நிறுவனத்திற்கும் எதிரானவர்கள் கிடையாது. ஆனால் லுலு நிறுவனம் கால் பதித்தால் சிறு வணிகர்கள் காணாமல் போய் விடுவார்கள். லுலு நிறுவனம் கோலோச்சிக் கொண்டிருக்கின்ற துபாயில் கூட அந்த நிறுவனம் வேண்டாமென்று தான் கூறிக்கொண்டு இருக்கின்றனர்.
லுலு நிறுவனம் கொண்டுள்ள வியாபார மாதிரி, சிறு வியாபாரிகளை அழித்து பெரிய பெரிய நிறுவனங்கள் கட்டும் நோக்கில் தமிழகத்திற்குள் நுழையும்போது அதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது” என்று தெரிவித்தார்.