வாட்ஸ்அப் செயலியின் புது அப்டேட் – காலண்டர் ஐகான் அறிமுகம், பழைய உரையாடலை மீண்டும் அசைப்போட முடியும்

உலகம் செய்திகள் மற்றவை

சமீப காலத்தில் சமூக வலைதளங்களில் மக்கள் அதிகம் பயன்படுத்துவது வாட்ஸ்அப்-ஐ தான். எளிதில் செய்திகளை குறிப்பிட்ட எண்களுக்கு அனுப்பலாம். ஆடியோ கால், வீடியோ கால் போன்ற வசதிகள் பின்னர் அறிமுகமாயின. ஒவ்வொரு முறையும் வாட்ஸ்அப் அப்டேட் கொடுத்துவருகிறது. சமீபத்தில் அனுப்பும் செய்திகளை விருப்பப்பட்டடால் டெலீட் செய்துகொள்ளலாம். அதே போல குறிப்பிட்ட நாம் அனுப்பும் மெஸேஜ்களுக்கு ரியாக்ஷன் கொடுக்க முடியும்.
இப்படி பலவிதமான அப்டேட்களை கொடுத்து வந்த வாட்ஸ்அப் விரைவில் மற்றொரு புதுவித அப்டேட்-ஐ கொடுக்கவிருக்கிறது. காலண்டர் ஐகான் அறிமுகம் செய்யவிருக்கிறது. குறிப்பிட்ட தேதிகளை தேர்வு செய்து அன்றைய தேதியில் என்ன உரையாடல் நடந்ததென நான் பார்த்து மீண்டும் படித்துக் கொள்ளலாம். அந்த உரையாடல் ஏற்கனவே அழிக்கப்பட்டிருந்தாலும் தேதியைத் தேர்ந்தெடுத்து அந்த குறிப்பிட்ட செய்தி அல்லது உரையாடலை பார்த்துக் கொள்ளமுடியும்.

Leave a Reply

Your email address will not be published.