நடந்து முடிந்த ஆஸ்கர் பரிசளிப்பு விழாவில் சிறந்த நடிகருக்கான பரிசைப் பெற்ற வில் சுமித், விருது வழங்கும் நிகழ்ச்சியை தொகுத்து வந்த நடிகர் கிரிஸ் ராக்கின் கன்னத்தில் மேடையில் வைத்தே ஓங்கி அறைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
வில் சுமித்தின் மனைவி குறித்து கிரிஸ் ராக் உருவ கேலி செய்ததால் அவரைத் தாக்கியதாகவும், அது தவறான முன்னுதரனமாக ஆகிவிட்டதாகவும் கூறி மன்னிப்பு கேட்டிருந்த வில் சுமித் தன் ஆஸ்கர் சம்மேளன உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்திருந்தார்.
இந்த நிலையில் அவர் மீது ஆஸ்கர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் நடந்து கொண்ட விதம் விரும்பத்தகாததகவும் ஆஸ்கர் மேடையை அவமதிக்கும் விதமாகவும் இருந்ததாக கூறி பத்து ஆண்டுகள் அவர் ஆஸ்கர் மற்றும் இதர விருது வழங்கும் விழாக்களில் கலந்துக் கொள்ள தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.