உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல தொழில்கள், வியாரபங்கள் முடங்கின மற்றும் மாற்று வழிகளில் அவைகளை தொடர நேரிட்டது. குறிப்பாக ஐடி தொழில் பெரும் சவாலை சந்தித்தது. ஊழியர்களை நிறுவனங்களுக்கே வரவழைத்து வேலை பார்க்க வைக்க முடியாமல் மாற்று வழியை தேடத் தொடங்கின. அனைத்து ஐடி நிறுவனங்களும் சிக்கல்களை கருத்தில் கொண்டு ஊழியர்கள் அனைவரையும் வீட்டிலிருந்தே வேலை பார்க்க பனித்தது.
ஐடி ஊழியர்கள் தங்களது கணிப்பொறிகளை, கணினிளை வீட்டிற்கே எடுத்துச் சென்று வேலைகளை தொடங்கினர். பிராஜக்ட் நிமித்தமான அனைத்து அழைப்புகளும் ஸூம் மீடிங்கிலும் தொலைபேசி வாயிலாகவும் செய்து வருகின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலர் இரண்டு நிறுவனங்ளுக்கு வேலைப் பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஏற்கனவே இன்ஃபோசிஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது ஞாபகம் இருக்கலாம்.
தற்போது விப்ரோ நிறுவனத்திலும் அப்புகார்கள் எழுந்துள்ளன. விப்ரோ ஊழியர்கள் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே வேறொரு நிறுவனத்திலும் வேலை பார்ப்பதாக புகார் எழுந்து அப்புகார்கள் உண்மையென கண்டறியப்பட்டு 300க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளது விப்ரோ நிறுவனம்.