தேசிய உணவு பாதுகாப்பு நாள்

செய்திகள்

உணவு அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமையாத தேவை.உயிரினங்களுக்கு வாழ்வதற்கு தேவையான ஆற்றலை அளித்து வாழ்தலுக்கும் , வளர்ச்சிக்கும் அடித்தளமாய் விளங்குகிறது. அப்படியான உணவின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் கடந்த 2019 ஆண்டு முதல் ஜுன் 7 தேசிய உணவு பாதுகாப்பு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பும் (WHO ) , உணவு மற்றும் விவசாய அமைப்பும் (FAO ) இணைந்து உணவு பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துத்துரைத்தது.
அப்படியாக பார்த்தோமேயானால் இந்த ஆண்டு மூன்றாவது தேசிய உணவு பாதுகாப்பு நாள் , இன்று கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டிற்கான கருப்பொருள் ( Theme ) ” safe food today for a healthy tomorrow ” – அதாவது “இன்றைய பாதுகாப்பான உணவு நாளைய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் ” என்பதாகும்.

ஏன் இந்த நாளை கொண்டாட வேண்டும் ?
இந்த நாளானது உணவு பொருட்களின் சுகாதாரத்தை பேணுவதன் பொருட்டும் , உணவு பொருட்களின் கலப்படம்‌ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் , சுகாதாரமற்ற உணவுகளால் பரவுகின்ற நோய்களையும் கண்டறியவும் மற்றும் நோய் பரவலை தடுக்கும் பொருட்டும் , மேலும் உணவு‌ சார்ந்த விவசாயத்தின் மூலம் பொருளாதார வளர்ச்சி , உணவு பொருட்களை சந்தைபடுத்துதல் போன்ற துறைகளில் மேம்பாடு அடைதலை குறிக்கோளாக கொண்டுள்ளது.

     சுகாதாரமற்ற உணவுகளால்  நோய்கள் எல்லா வயதினருக்கும் ஏற்படும் என்றாலும் குழந்தைகளுக்கும் , முதியோர்களுக்கும்‌ அதன் தீவிரம் சற்று அதிகமாகவே இருக்கிறது. சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்வதால் வாந்தி , மயக்கம் , காய்ச்சல் , வயிற்று வலி , வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படுகிறது . 

    இப்படி இன்றியமையாத ஆற்றலான உணவை பாதுகாத்தல் என்பது நம் தலையாய கடமை என்பதை உணர்வோம்.நல்ல ஆரோக்கியமான சந்ததிகளுக்கு வழிவகுப்போம்.

Leave a Reply

Your email address will not be published.