உலகத் தாய்மொழி நாள்- மிசௌரி தமிழ்ச் சங்கம்

தமிழ் சங்கங்கள்

மொழிகள் மற்றும் பன்மொழிகள் சேர்க்கையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கோடு உலகத் தாய்மொழி தினம் ஐ.நா சபையால் பிப்ரவரி 21 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் மொழியின் நிலையான வளர்ச்சி இலக்குகளில் அதிக கவனிப்பு செலுத்தப்படும். முதல் மொழி அல்லது தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட கல்வியானது, ஆரம்ப கால குழந்தைப் பருவத்திலிருந்தே தொடங்க வேண்டும் என யுனெஸ்கோ நம்புகிறது, ஏனெனில் ஆரம்பகால குழந்தைப் பருவம் கல்வி கற்றலின் அடித்தளமாகும்.

மிசௌரி தமிழ்ச் சங்கம் சார்பாக 2022 ஆம் ஆண்டிற்கான உலகத் தாய்மொழி நாள் சிறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை 20.02.2022 அன்று இரவு 08.00 மணி அளவில் மிசௌரி தமிழ் சங்கத்தின் முகநூல் பக்கத்திலும் யூடியூப் தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

காலை பத்து மணி அளவில் இந்திய காவல் பணியாற்றும் முனைவர் இரா.திருநாவுக்கரசு அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கேள்விகளுக்கு விடையளித்து இந்நிகழ்வை சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் பண்டைய தொல்லியல் தமிழ் ஆவணங்களை மீட்டு தமிழகத்திற்குக் கொண்டு வந்து தமிழ் வரலாற்றை மீட்ட மாநிலங்களவை உறுப்பினர் என். ஆர். இளங்கோ அவர்கள் இரவு எட்டு மணியளவில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். இவர் திருச்சிராப்பள்ளி அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர்.

இனிமை, எளிமை, நீர்மை உடைய செம்மொழி நம்மொழி தமிழ் மொழியை மேலும் பெருமைப்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்நிகழ்வின் வாயிலாக அமெரிக்க தமிழ் மக்கள் ஒன்றிணைந்து தாய்த்தமிழ் பெருமை போற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *