இசையால் வசமாகா இதயம் எது …?
எல்லோருமே சில மணித்துளிகளேனும் இசையை ரசித்து , லயித்து உறவாடிக்கொண்டு தான் இருக்கிறோம்.
பிறப்பில் தாலாட்டாய் தொடங்கும் இசைக்கும் நமக்குமான பயணம் இறப்பு வரையிலும் தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கிறது.
இசையானது ஒரு கலை , பொழுதுபோக்கு என்பதையெல்லாம் தாண்டி உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பல்வேறு வகைகளில் உதவுகிறது.
இசை மன அழுத்தத்திற்கு காரணமான ஹார்மோன்களின் சுரப்பை சமன்நிலை படுத்துவதன் மூலம் மன அழுத்தத்தை போக்குவதோடு anxiety எனப்படும் மன எழுச்சி போன்றவற்றை குறைப்பதற்கு உதவுவதன் மூலமும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வினை அளிக்கிறது. அல்சீமர் (alzeimer’s disease ) போன்ற குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு மறதியால் அவதிப்படுவோரின் நியாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
இசை கேட்கும் போது மன அமைதி , ஒரு நிலைத்தன்மை போன்றவற்றை மேம்படுத்துகிறது.
இசை சிகிச்சை எனப்படும் மியூசிக் தெரபி முறையாக பயிற்சி பெற்ற வல்லுனர்களின் மூலம் மருத்துவ சிகிச்சையோடு இணைத்து வழங்கப்படுகிறது.
இசை சிகிச்சையில் இசையை கேட்பதோடு மட்டுமல்லாது இசை கருவிகளை வாசித்தல் , பாடல் பாடுதல் போன்றவை தனியாகவோ குழுவாகவோ பயிற்றுவிக்கப்படுகிறது.குழுவாக ஈடுபடுவதன் மூலம் அதன் பலன் பன்மடங்கு அதிகரிக்கிறது.
இசை எண்ணவோட்டத்தை மாற்றும் வல்லமை கொண்டதாக இருக்கிறது.இசை கேட்பதன் மூலம் நம் எதிர்மறை எண்ணங்களை போக்கி நேர்மறை எண்ணங்களை அதிகரித்துக்கொள்ள உதவுகிறது.