அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ‘ஃபோர்ப்ஸ்’ ஆண்டுதோறும் உலகின் மகோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டது. இதில் மொத்தம் 2,668 கோடீஸ்வரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 12.7 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 219 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 171 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். உலக அளவில் கோடீஸ்வரர்களை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
2022-க்கான இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இதில் முகேஷ் அம்பானி முதலிடத்திலும், அதானி இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.